உராய்வு

லண்டனில் சீனாவும் ஈரானும் சிறிலங்காவும்
போன கிழமை லண்டனுக்கு (london) போனான். லண்டனுக்கெண்டால் லண்டனுக்கில்லை. லூட்டனுக்கு (luton) போனான். நாங்கள் இங்கிலாந்து முழுக்கலயும் லண்டன் எண்டுதான் சொல்லுறனாங்கள். இங்கிலாந்தின்ர எந்தப் பகுதிக்கு போனாலும் – லண்டனுக்கு போனதெண்டுதான் சொல்லுறனாங்கள். அதேன் எண்டுதான் தெரியேல.

இது இரண்டாவது தடவை நான் இங்கிலாந்துக்கு போனது. முதல் தடவை கவிதை புத்தக அறிமுக நிகழ்வுக்காக போனான். நண்பர் ஒராளோட போனான். அப்ப நான் படிச்சுக்கொண்டிருந்த நேரம். அதுவும் இப்பிடி அவசரத்தில தான் போனான். வெள்ளிக்கிழமை போய் திங்கட்கிழமை வந்தது.

இந்த முறைப் பயணமும் திடீர் பயணம் தான். நண்பன் ஒருத்தன் “ரிக்கற் மலிவா போட்டிருக்கிறாங்கள் – நான் போறன் – நீயும் வாறியா” எண்டான். நானும் “எனக்கும் சேர்த்து” book பண்ணு எண்டன். என்னட்ட கேட்டிட்டு அவன் book பண்ணுறதுக்குள்ள அவங்கள் கொஞ்சம் விலை கூட்டிட்டாங்கள். இந்த முறையும் வெள்ளி போய் திங்கள் வந்தது.

லண்டன் பாக்கோணும் எண்டு போகல. உண்மையச் சொன்னால் எந்தத் திட்டமும் இருக்கேல. ஒருசிலர சந்திக்கிறது எண்டுறது மட்டும் யோசிச்சு வைச்சிருந்தனான். stansted ல தான் விமானம் இறங்கினது. அங்க வந்து நண்பர் கூட்டிக்கொண்டு போனவர். பண்டிக் காய்ச்சலுக்கு பயந்து, சிற்றுந்துக்குள்ள ஏறேக்க anti-bacteria gel பூசச் சொல்லித் தந்தார்.

அடுத்தநாள் லண்டன் பாப்பம் எண்டு வெளிக்கிட்டம். போனமுறை வந்து நிக்கேக்க பெருசா ஒரு இடமும் போகல. “லண்டனில என்ன பாக்கப்போறீர்” எண்டு நண்பர் கேட்டார். எனக்கெண்டால் ஒண்டையும் பார்க்க ஆர்வமிருக்கேல்ல. என்னத்த பாக்கிறது. big ben, tower bridge, buckingham palace, london eye எண்டு சின்னனில இருந்து பள்ளிக்கூடத்தில புத்தகத்தில பார்த்த + படிச்ச இடங்கள் தான். என்னவோ தெரியல ஒரு ஆர்வமும் இருக்கல. madame tussauds க்கு கிட்ட வந்து நிக்கேக்க அதுக்கு போவமோ எண்டு கேட்டார். அதுக்கும் என்ர முகத்தில எந்த அசைவும் இருக்கேல.

பிறகு வழிகாட்டி (navigator) ல ஏதும் பக்கத்தில ஆர்வமான இடங்கள் இருக்கா எண்டு பாக்க சொன்னார். அதில பார்த்து moving images museum க்கு போவம் எண்டு வெளிக்கிட்டம். traffic களுக்குள்ள நிண்டு சுத்துப்பட்டதில இடம் சரியா பிடிபடல. பிறகு உப்பிடியே போனா ஒண்டும் செய்யேலாதெண்டிட்டு சிற்றுந்த ஒரு இடத்தில நிப்பாட்டிட்டு லண்டன் தெருக்களில கொஞ்சம் நடப்பம் எண்டு வெளிக்கிட்டம். சிற்றுந்த விட்டிட்டு கொஞ்சத் தூரம் தான் நடந்தம் – மழை பெய்ய வெளிக்கிட்டுது. இப்பிடி – மழையோடும் குடையோடும் லண்டன் தெருவில் – கனநேரம் நடந்து திரிஞ்சம். நடக்கேக்கயும், சிற்றுந்து பயணத்திலயும் நிறைய விசயங்கள் பார்த்தம் + கதைச்சம்.

சரி மொத்தத்தில – லண்டனுக்கு போய் அப்பிடி என்னத்ததான் பார்த்துக் கிழிச்சனான்?

1. சீனத் தூதரகத்துக்கு எதிரில் சீனரின் கவனயீர்ப்புப் போராட்டம்

சிற்றுந்தில போய்க்கொண்டிருக்கேக்க நண்பர் சொன்னார் “இதில ஒராள் நிண்டு ஏதாவது ஒரு விசயத்த திரும்ப திரும்ப செய்துகொண்டிருப்பார் – பாரும்” எண்டு. அவர் சொன்னமாதிரி அந்த இடத்தில ஒராள் நிண்டு கையை உயர்த்தி ஏதோ செய்துகொண்டிருந்தார். சீனாவின் கொமுனிச அரசின் படுகொலைகளுக்கு எதிராக – ஒவ்வொரு நாளும் – சீனத் தூதரகத்துக்கு எதிராக நிண்டு இந்தக் கவனயீர்ப்ப செய்யினம். ஒவ்வொரு நாளும் ஒரே ஒராள் மட்டும் தான் அதை செய்வாராம். அதால போய் வாற ஆக்களின்ர கவனத்த ஈர்க்குறதுக்காக – ஏதாவது ஒண்ட அவர் திரும்ப திரும்ப செய்துகொண்டிருப்பாராம். அவருக்கு பக்கத்தில சீன அரசின் படுகொலைகள் பற்றி பதாகை ஒண்டும் இருக்கும். நாங்கள் எல்லாம் முடித்துவிட்டு திரும்பி வரேக்கயும் – அந்த மழைக்குள்ளயும் – அவர் தொடர்ந்து அதில நிண்டு கவனயீர்ப்ப செய்து கொண்டிருந்தார். யூன் மாதம் 2002 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக செய்யப்படுவதாக அந்தப் பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பதாகைகளில் குறிப்பிடப்பட்டிருந்த இணையத்தள முகவரிகள்:

www.faluninfo.net

www.clearharmony.net

2. peace strike குழுவினரால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்

எந்த வீதியெண்டு சரியா தெரியல. ஆனா, big ben இருக்கிற இடத்துக்குக் கிட்ட ஒரு பிரதான வீதியின் கரையோரமா இந்த கவனயீர்ப்பு நடந்தது. நிறைய சிறிய கூடாரங்கள் கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மழைபெய்துகொண்டிருந்தது. ஒரே ஒரு வயது போன மனிதர் குடைய பிடிச்சபடி அந்த கூடாரங்களின் நடுவில நிண்டு  கொண்டிருந்தார். பதாகைகள் சில பக்கத்தில இருந்தன. ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிறிலங்கா என நான்கு நாடுகளினதும் நிலையை வெளிக்காட்டும் விதமாக பதாகைகள் இருந்தன. குறிப்பா சிறிலங்காவை புறக்கணிக்குமாறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. தடுப்புமுகாம் பற்றிய பதாகை ஒண்டும் இருந்தது. தமிழர்கள் எவரையும் அந்த இடத்தில் காணவில்லை. நாங்கள் (நானும் நண்பரும்) அந்த இடத்துக்கு கிட்ட போய் படங்கள் எடுத்தம். அந்த வயசு போன மனிதர் மிகப் பணிவாக – ஒரு சிறிய காகித துண்ட எடுத்து எங்களிட்ட நீட்டினார். அதில கையால www.peacestrike.org எண்டு இணையத்தள முகவரி எழுதப்பட்டிருந்தது.

3. அமெரிக்காவுக்கு எதிரான விளம்பரப் பதாகைகள்

சிற்றுந்து பயணத்தின் போது லண்டன் வீதிகளில நிறைய வகையான விளம்பரப் பதாகைகளை (poster) பார்க்க நேர்ந்தது. குறிப்பாக rt.com இனால் செய்யப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள். ஈரான் பிரச்சனையை மையப்படுத்திய ஒரு பதாகை (Who poses the greater nuclear threat?) கண்ணில் பட்டதால் ஆர்வம் மேலிட்டு – rt.com இன் ஏனைய பதாகைகளையும் பார்க்க வைத்தது.

காரணம், லண்டன் பயணத்துக்கு முந்திய ஒரு வாற இறுதி நாளில் யேர்மனியில் இயங்கும் ஈரானியர்களுக்கான ஒரு அமைப்பின் பிரதிநிதிகள் இருவரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தோம். ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பும் மக்கள் அலையை தமக்குச் சாதகமாக பயன்படுத்த நினைக்கும் மேற்குலகத்தின் எண்ணம் பற்றி உரையாடினோம். மேற்குறிப்பிட்ட ஈரானியர்களுக்கான அமைப்பு (united4iran) ஈரானில் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் மக்களை ஆதரிக்கவும், அவர்களைப் பலப்படுத்தவும் என புலத்தில உருவாக்கப்பட்டிருக்கிற ஒரு அமைப்பு. அதை அமைப்பு எண்டு சொல்லுறத விட பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கூட்டமைப்பு எண்டு சொல்லுறது பொருத்தமாக இருக்கும். ஈரானில் சனநாயக முறை அமுல்படுத்தப்படுறதையும், தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுறதையும் உறுதிசெய்யுறது தமது நோக்கம் எண்டு அந்த அமைப்பு சொல்லுது. தனிய ஈரானியர்களை மட்டுமில்லாமல் தம்மோடு இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள வேற்றினத்தவர்களையும் அழைக்கினம். பல்வேறு கொள்கையுடைய அமைப்புகள் இந்த தாய் அமைப்பின் கீழ் இணைந்திருக்கின்றன. பெரும்பாலும் ஐரோப்பியர்களின் உள்வாங்கலை சந்தேகத்தோட தான் அவை அணுகினம் எண்டத அவர்களோடான உரையாடலில இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.

அமெரிக்காவுக்கு எதிரான உருசியாவின் (russia) உருவாக்கமாக மேற்குறிப்பிட்ட பதாகைகள் இலண்டன் வீதிகளில் பல இடங்களில் காட்சியளிக்கின்றன. இங்க போய் இந்த campaign இன் பதாகைகள் அனைத்தையும் நீங்கள் பார்க்கலாம்: http://rt.com/ads. அமெரிக்க விமான நிலையங்கள் பலவற்றில் இந்த விளம்பரப் பதாகைகளை காண்பிக்க மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4. அமெரிக்காவின் பயங்கரவாதமும் – அமெரிக்க மீட்பரின் புதிய அவதாரமும்

யேர்மனியில பார்க்க வெளிக்கிட்ட அவதார் திரைப்படத்த இங்கிலாந்தில போய்த்தான் பார்த்தனான். முதல் ticket எடுக்க போய் ticket வித்துத் தீர்ந்திட்டு எண்டு திரும்பி வந்து அடுத்த நாள் போய் பார்த்தனாங்கள். 3dல முதன் முதலா பார்த்த அனுபவம். நல்லா இருந்தது. உயர் தொழில்நுட்ப வேலைகள் வியக்க வைச்சுது. மிகப் பிரமாண்டமா இருந்திச்சு. மேலோட்டமா கதையைப் பார்த்தால் ரசிக்கக் கூடியதாக இருக்குது. செவ்விந்தியர்களைக் கொன்று குவித்த வெள்ளையர்கள் பற்றிய நினைப்பு வந்துகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானும், ஈராக்கும் நினைவில் வந்து போனது. நுண்ணரசியல் என்று பார்த்தால் தம்மையே மீட்பர்களாகக் காட்டியது.

இவைதான் லண்டனுக்கு (இங்கிலாந்து) போய் பார்த்து கிழிச்சது.

பகை ஏதுள?
அலைகள் புரள்

அன்னைக் கடல்

நுரைகள் திரள்

அழகுன் உடல்

மலைபோல் எழ

தலைமேல் விழ

உலகம் அழ

பகை ஏதுள…?

கரையைக் கட

காலில் விழு

கதறிஈ அழு

கண்ணீர் விடு

ஆழம் மிகு

கடலே அறி

வீரம் மிகு

தமிழர் குடி

கோரம் மிகு

கொடுமை இது

கொண்டாய் பலி

கொண்டோம் வலி

எதனால் இது

எமக்கேன் இது

எனநீ ஒரு

பதிலைக் கொடு

அழுகைக் குரல்

அகதிச் சுமை

குருதிக் குளம்

போரின் முகம்

இதுநாள் வரை

இதுதான் நிலை

இழந்தோம் பல

இறந்தோம் பலர்

அலையே குறி

ஓயார் இவர்

படகே றுவர்

வலைவீ சுவர்

கோலத் தமிழ்

கொள்கைக் குரல்

வானின் நிழல்

காற்றின் குழல்

தூறும் மழை

புழுதிஈ மணல்

நிலவின் ஒளி

தாய்மண் மடி

இவையே எம்

உறவான பின்

துயர் சூழுமோ?

உயிர் வாடுமோ?

கொலைகாரர்களின் சுதந்திரம்
சக இனங்களை அடக்கிக்கொண்டு – தனது சுதந்திரநாளைக் கொண்டாடுகிறது ஒரு நாடு. சக இனங்களின் உரிமைகளை மறுத்துக்கொண்டும், அவர்களை மிதித்துக்கொண்டும் – அவர்களின் பிணங்களின் மீது தனது தேசியக்கொடியைப் பறக்கவிடுகிறது ஒரு நாடு. வன்முறைகளைக் கட்டவிழ்த்துக்கொண்டும், ஆயுத உற்பத்தி செய்துகொண்டும், அயல் நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பிக்கொண்டும் – அகிம்சை பற்றிப் பேசுகிறது ஒரு நாடு. போராடும் இனங்களின் குரல்வளையை நசுக்கிக்கொண்டு – தனது தேசிய கீதத்தை இசைக்கிறது ஒரு நாடு. ஒழியட்டும் அதன் ஆதிக்கம் – உடையட்டும் அவ்விலங்கு. ஒடுக்கப்படும்  இனங்களே விடுதலை பெறுக. போராடும் இனங்களே  உரிமைகள் பெறுக.

குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்
இது ஒரு குழந்தை.

இது எப்படி வந்தது?

ஒரு அப்பா.

ஒரு அம்மா.

இவர்கள் சேர்ந்து,

பிறந்தது இந்தக் குழந்தை.

இங்கு -

அப்பாவிலும் ஆடை இல்லை.

அம்மாவிலும் ஆடை இல்லை.

அம்மாவில் –

மேலே தெரிவது மார்பு.

கீழே தெரிவது ஒரு வெடிப்பு.

அதை பெண்குறி என்போம்.

அப்பாவில் -

கீழே தெரிவது தண்டு.

அதை ஆண்குறி என்போம்.

அதனோடு சேர்ந்து -

கால்களுக்கு இடையே

தொங்குவது விதைகள்.

அப்பாவுக்கு அம்மா மீது நேசம்.

அம்மாவுக்கு அப்பா மீது நேசம்.

அணைக்கிறார்கள்.

முத்தமிடுகிறார்கள்.

அப்பாவின் தண்டு நீள்கிறது.

அதில் விறைப்பு ஏறுகிறது.

அம்மாவின் வெடிப்புக்குள்

அப்பாவின் தண்டு நுழைவதை

இருவரும் விரும்புகிறார்கள்.

அந்த நுழைவு இனிமை தரும்.

அம்மாவும் அப்பாவும்

படுக்கையில் கூடுகிறார்கள்.

வெடிப்புக்குள் தண்டு செலுத்தப்படுகிறது.

அந்த நிலையில் -

அவர்கள் மேலும் கீழுமாக ஆடுகிறார்கள்.

இதுவே கலவி எனப்படும்.

இது சுகமானதாக இருக்கும்.

இப்படியாக -

அம்மாவும் அப்பாவும் விரும்பும் போது,

அவர்கள் குழந்தையை உருவாக்கலாம்.

அம்மாவுக்கு அப்பாவில் விருப்பம்.

அப்பாவுக்கு அம்மாவில் விருப்பம்.

இருவரும் கூடி

குழந்தை பெற விரும்புகிறார்கள்.

அப்பாவின் விதையினுள்

விந்து அணுக்கள் உள்ளன.

கலவியின் போது

தண்டு வழியாக

விந்து அணுக்கள் வெளியேறும்.

விந்து அணுக்கள்

அம்மாவின் பெண் உறுப்பினுள்

நீந்திச் செல்கின்றன.

அவை வயிற்றினுள் இருக்கும்

ஒரு பையைச் சென்றடைகின்றன.

அதுவே கருப்பை ஆகும்.

இந்தப் பையில் காலத்துக்கு காலம்

ஒருவகை முட்டை உருவாகும்.

இந்த முட்டையுடன் விந்து இணைய

அவை குழந்தையாக உருவாகிறது.

நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமும்

கருப்பையில் குழந்தை வளர்கிறது.

ஒன்பது மாத நிறைவில்

குழந்தை வெளியே வரத் தயாராகி விட்டது.

அம்மாவின் வயிறு

பெரிதாகி விட்டது.

ஆடைகள்

இறுக்கமாகி விட்டன.

குழந்தை நகர்வதை

அம்மா உணர்கிறாள்.

அப்பாவிடம் கூறுகிறாள்.

குழந்தை பிறக்கும் நாள்

நெருங்கி விட்டது.

அப்பா அம்மாவை

மகப்பேறு மனைக்கு

அழைத்துச் செல்கிறார்.

அங்கே அம்மாவை

படுக்கையில் கிடத்துகிறார்கள்.

மருத்துவர் வருகிறார்.

அம்மா அப்பாவுடன் பேசுகிறார்.

குழந்தை பிறக்கும் போது

மருத்துவர் உதவி புரிவார்.

பிரசவம் தொடங்குகிறது.

அம்மாவின் பெண் உறுப்பின் ஊடாக

முதலில் குழந்தையின் தலை

வெளியே வருகிறது.

அதன்பின் கைகள்.

குழந்தை முழுமையாக

வெளியே வந்துவிட்டது.

மருத்துவர் தொப்புள்கொடியை

வெட்டிவிட்டார்.

அதனோடு சேர்ந்து

நஞ்சுக்கொடியும் (கருக்குடை) வெளியேறிவிட்டது.

அம்மாவும் பிள்ளையும்

சில நாட்களுக்கு

ஓய்வெடுக்கிறார்கள்.

பின்னர் வீட்டுக்கு வருகிறார்கள்.

குழந்தைக்கு பசித்தால்

அம்மா பாலூட்டுவாள்.

பிள்ளை -

அம்மாவின் முலையிலிருந்து

பாலை உறிஞ்சிக் குடிக்கும்.

குழந்தை பெறுதல் சில நினைவுகள்
பிள்ளை எப்பிடி வயித்துக்குள்ள வாறது? வயித்துக்குள்ள இருந்து பிறகு எப்பிடி வெளில வாறது? சின்னனில எனக்கு இருந்த கன கேள்வியளில இதுவும் ஒண்டு. நான் சின்னனா இருக்கேக்க – சித்தியின்ர வயிறு பெருசா இருந்தது. ஒருநாள் வலியெடுத்து மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போனவை. அப்ப அது ஒரு சண்டைக்காலமாக இருக்கவேணும். இந்தியன் ஆர்மி நிண்ட நேரம் எண்டு நினைக்கிறன். சித்தப்பா சித்தியை ஏதோ சுவர் தாண்டி குறுக்குவழியால தான் கூட்டிக்கொண்டு போனவர். எனக்கு சரியா நினைவில்ல. அந்த நினைவுகள் மங்கலாத்தான் மனசுக்குள்ள இருக்கு. திரும்பி சித்தி வீட்டுக்கு வரேக்க ஒரு குழந்தையோட வந்தவா. சித்தியின்ர கடைசி மகள். என்ர தங்கச்சி. அதான் என்ர முதல் அனுபவம்.

பிறகு படங்களில பார்த்திருக்கிறன். ஆம்பிளையும் பொம்பிளையும் கட்டிப் பிடிப்பினம். கட்டிலில இருப்பினம். மெல்லமா கட்டிலில சாய்வினம். விளக்கு அணைஞ்சிரும். இருட்டாகிடும்.  பிறகு பொம்பிளையின்ர வயிறு பெருசா இருக்கம். ஒருநாள் வலியெடுத்து அழுவா. மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போவினம். அறைக்குள்ள கொண்டு போனாப்பிறகு – வெளில எல்லாரும் அந்தரப்பட்டுக்கொண்டு ஓடித் திரிவினம். கொஞ்சநேரத்தில் “அம்மா” எண்டு அந்த அறைக்குள்ள இருந்து பெருசா ஒரு அலறல் வரும். பிறகு சின்னதா “ஆ….” எண்டு குழந்தை அழுற சத்தம் வரும். மருத்துவர் குழந்தைய தூக்கிக்கொண்டு வெளில வந்து “உங்களுக்கு ஆண்குழந்தை/பெண்குழந்தை பிறந்திருக்கு” எண்டு சொல்லுவார். இது எல்லாம் அநேகமா ஒரு அஞ்சு நிமிசத்தில நடந்து முடிஞ்சிடும். சில படங்களில ஒரு பாட்டிலயே எல்லாம் நடந்திரும்.

என்ர கடைசித்தம்பி நாங்கள் (நான், அம்மா, என்ர முதல் தம்பி) யேர்மனிக்கு அப்பாட்ட வந்தாப் பிறகு பிறந்தவன். நினைவு தெரிஞ்ச அல்லாட்டி ஒரளவு யோசிக்கக்கூடிய வயசில கிடைச்ச “குழந்தை பிறத்தல்” பற்றின நேரடி அனுபவம் அதான். ஆனால் எனக்கு அப்பவும் விளக்கமில்ல.

சின்னனில குழந்தை பிறக்கிறது பற்றி சின்னச் சின்னதா சில படிமங்கள் மனசில பதிஞ்சிருந்தது. ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிச்சா பிள்ளை பிறக்கும். கொஞ்சினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டி 10 மாசம் ஆனாப்பிறகு பிள்ளை பிறக்கும். இதெல்லாம் தமிழ் சினிமாப் படங்கள் பார்த்தும், பெரியாக்கள் எங்கட கேள்வியள சமாளிக்க சொல்லுற கதையளில இருந்தும் மனசில ஏற்பட்ட படிமங்கள்.

பள்ளிக்கூடத்திலயும் குழந்தை பிறக்கிறது பற்றி நான் படிக்கேல. கொழும்பில நான் கடைசியா படிச்ச வகுப்பு வரைக்கும் – எங்கட பாடப்புத்தகங்களில அல்லாட்டி பாடத்திட்டத்தில இது பற்றி இருக்கேல. பிறகு யேர்மனிக்கு நான் வந்து – யேர்மன் பள்ளிக்கூடத்தில சேரேக்க அவை அந்தப் பாடத்தக் கடந்து போட்டினம். பூப்படையிறது, குழந்தை உருவாகிறது பற்றியெல்லாம் அவை படிச்சு முடிச்சிட்டினம். அடுத்த வகுப்பிலயும் அதப்பற்றி படிப்பிச்சவை. ஆனா நான் வந்த புதுசு – எனக்கு மொழி தெரியாததால எதுவும் விளங்கேல. அப்ப எனக்கு யேர்மன் மொழியில தெரிஞ்ச வார்த்தையள் இரண்டுதான் –  “ja” (ஓம்) “nein” (இல்லை). அதால, என்னால அப்ப அதப்பற்றி தெரிஞ்சு கொள்ள முடியேல. வீட்டிலயும் சொல்லித் தராயினம் தானே. என்ர வயச ஒட்டின தமிழ் நண்பர்களும் எனக்கு அப்ப இருக்கேல. அதால அதப் பற்றி தெரிஞ்சு கொள்ளுறதுக்கான வாய்ப்பு கிடைக்கேல. பிறகு கொஞ்சம் தாமதமாத்தான் சுயதேடல்கள் ஊடாக கற்றுக்கொள்ள முடிஞ்சது. இப்பிடி மொழி தெரியாததால, அந்நிய நாட்டில சொந்தங்களும் எங்கட வயசுக்குரிய நண்பர்களும் பக்கத்தில இல்லாததால, தனிய இருந்ததால, பதின்ம வயதின்ர தொடக்கத்தில நாட்டை விட்டு வந்ததால நான் (என்னை மாதிரி பலபேர்) இழந்ததுகள் கனக்க.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்லுறன்? ஒண்டுமில்ல அண்டைக்கு நண்பன் ஒருத்தன் ஒரு இணைப்பை தந்து “சிலவேளை உனக்கு குழந்தை பிறக்கிறது எப்பிடியெண்டு தெரியாட்டி போய்ப் பார்” எண்டு சொன்னான். என்னடா எண்டு பார்த்தால், படம் போட்டு கீழ விளக்கக் குறிப்புகளும் எழுதி இருந்தது. “குழந்தை பிறத்தல்” பற்றின சின்னப் பிள்ளையளுக்கான பாடப்புத்தகம்/படப்புத்தகம். scan செய்து யாரோ இணையத்தில ஏத்தியிருக்கினம். யேர்மன் மொழியில இருந்தது. அதப் பார்த்தோடன நினைவுகள் எல்லாம் கிளறுப்பட்டிட்டுது. அதான் கொஞ்சம் புலம்பினான்.

சரி – இந்த செய்முறை விளக்கத்த தமிழில போட்டால் என்ன எண்டு ஒரு பொறி தட்டிச்சு. கனபேருக்கு பிரியோசனமா இருக்கும். சின்னப் பிள்ளையள் கேள்வி கேட்டால் படம் காட்டி விளங்கப்படுத்த இலகுவாக இருக்கும். சிலநேரம் இன்னும் “குழந்தை பெறுதல்” பற்றி விளக்கமில்லாமல் இருக்கிற பெரியாக்களுக்கும் உதவியா இருக்கும்.

இனி செய்முறை விளக்கத்தப் பார்ப்பம். –> பார்க்க இங்கே அழுத்தவும்

சனநாயகம் ஒரு உரையாடல்
நண்பர்களோடையும் தெரிஞ்சாக்களோடையும் தொலைபேசியிலயும் skype, gtalk, msn போன்றதுகளிலயும் கதைக்கிறனான். சும்மா சுகம் விசாரிப்புகளாக இல்லாமல், சுவாரசியமான விவாதங்களாகவோ, கருத்தாடல்களாகவோ இருக்கும். சில நேரங்களில அது நீண்ட உரையாடல்களாவும் இருக்கும். அதிலயும் போன தலைமுறை ஆக்களோட கதைக்கிறதெண்டது மகிழ்ச்சியான விசயம். அவேன்ர போராட்டம், அரசியல், சமூகம் தொடர்பான அனுபவங்கள அறிஞ்சு கொள்ளுறதில எனக்கு அதிக ஆர்வம். இருந்திட்டு யோசிக்கிறனான், இப்பிடி கதைக்கிற விசயங்கள ஒலிப்பதிவு செய்து இணைக்கவேணும் எண்டு.

அண்டைக்கு skype ல கி.பி.அரவிந்தன் அண்ணாவோட கதைக்கேக்க கேட்டனான் – இப்பிடி ஒலிப்பதிவு செய்யட்டோ எண்டு. அவரும் ஓம் எண்டார். உடன ஏற்கனவே இறக்கி வைச்சிருந்த skype call recorder ஐ அமத்தி ஒலிப்பதிவு செய்யத் தொடங்கிட்டன்.

ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தாப் பிறகு, இண்டைக்கு சனநாயக வழிப் போராட்டம் எண்டு கதைக்கப்படுற சூழலில – சனநாயகத்த பற்றி பொதுவாக எங்கட சமூகத்துக்குள்ள இருக்கிற கேள்வியளை மையப்படுத்தித்தான் எங்கட உரையாடல் அமைஞ்சிருந்தது.

அப்பிடி அண்டைக்கு நாங்கள் கதைச்சதுகள தொகுத்து இப்ப ஒரு குரல்பதிவா போடுறன். ஒலிப்பதிவை தொகுக்கிறதுக்கு audacity எண்ட ஒலித்தொகுப்பு மென்பொருள பாவிச்சனான். இலவசமான opensource மென்பொருள் தான்.

நான் கிட்டடில 16 mbit இணைய இணைப்புக்கு (vDSL) மாறினான். என்ர கணினிக்கு wireless usb stick பாவிக்கிறன். அது அந்த 16 mbit vDSL modemக்கு ஒத்துவரேல. அதால, ஒலிப்பதிவில கொஞ்சம் குழப்பங்கள் இருக்கும்.

நெருப்புப் பறவைகளாய் உயிர்த்தெழுவோம்
வாற மாசம் (யூலை) 5ம் நாள் புலம்பெயர்ந்த நாடுகளில “உயிர்த்தெழுவோம்” எண்ட பேரில பேரணி நடக்க இருக்கு. சிங்கள அரசின்ர இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் உலக மக்களுக்கு வெளிப்படுத்துறதோட, வதைமுகாம்களில அடைச்சு வைக்கப்பட்டிருக்கிற மக்களை மீட்கக் கோரியும் இந்தப் பேரணி நடக்கப் போகுது. அந்தப் பேரணிக்காக சில poster/flyerகள் வடிவமைச்சனான். அதுக்கு செய்த படங்கள் தான் இதுகள். (flyerல உள்ள நிகழ்வு தொடர்பான விபரங்கள அகற்றி, படத்த மட்டும் இதில இணைக்கிறன்)

பிரபாகரன் கட்டியிழுத்தான்
இந்தப் படங்கள் இரண்டும் “பிரபாகரன் சிந்தனைகள்” எண்ட புத்தகத்தின்ர அட்டைப்படத்துக்காக செய்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முதல் யேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் எண்டு நாலு மொழியளில பிரபாகரன்ர கருத்துக்கள தொகுக்கிற முயற்சி ஒண்டு செய்தவை. யேர்மனியில படிக்கிற நாலு தமிழ் (பல்கலைக்கழக) மாணவியள் தான் இத மொழிபெயர்க்கிற வேலையள செய்தவை. அதில ஒருத்தி என்ர தோழி. அவள்தான் கேட்டாள் இப்பிடி ஒண்டு செய்யுறம், அட்டைப்படம் செய்து தாறியோ எண்டு. நானும் ஓமெண்டு செய்து குடுத்தன். 2 ஆண்டுகளுக்கு மேல ஆகுது – பிரபாகரனும் இருக்கிறாரா இல்லையா எண்டுற குழப்பத்தில சனமும் மூழ்கிட்டு – ஈழச்சூழலும் வேறவிதமா மாறிட்டுது – ஆனா, புத்தகம் இன்னும் வெளில வரேல. பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா எண்டுற குழப்பம்போல – புத்தகம் வருமா வராதா எண்ட குழப்பமும்.

இந்தப்படம்  அப்ப பொருத்தமா இருக்குமெண்டு நினைச்சு செய்தனான். இப்ப பார்க்கேக்க அந்தப் புத்தகத்துக்கு இந்த அட்டைப்படம் எந்தளவுக்கு பொருத்தமா இருக்கும் எண்டு தெரியேல. தனிய பிரபாரன்ர படத்தை வைச்சு ஏதாவது செய்திருக்கலாமோ எண்டு படுது.

எது எப்படியா இருந்தாலும் – இந்தப் படம் digital imaging (கலவை) முறையில செய்தது. படத்தில தெரியிற ஒவ்வொரு உருவங்களும் தனித்தனிப் படங்கள். புற்தரை, மரம், பறவைகள், கயிறு எல்லாம் வேற வேற படங்களில இருந்து வெட்டி எடுத்து இந்தப்படத்துக்கு ஏற்றமாதிரி மாத்தினது. வானம், முகில் இரண்டும் adobe photoshop ல செய்தது. அதில தெரியிற மனித உருவம் poser எண்ட முப்பரிமாண உருவங்கள வடிவமைக்கிறதுக்கான ஒரு மென்பொருள பயன்படுத்தி செய்தது. பிறகு எல்லாப்படத்தையும் digital imaging மூலம் கலவை செய்து இந்த அட்டைப்படங்கள வடிவமைச்சனான்.

அவளும் வண்ணத்துப்பூச்சியும்
முதல் மூண்டும் வேற வேற சந்தர்ப்பங்களில வரைஞ்ச உருவங்கள். இலை ஒரு குறியீட்டுச் சின்னத்துக்காக (logo) வரைஞ்சது. வண்ணத்துப்பூச்சியும் ஒரு இணையப்பக்கத்தின்ர குறியீட்டுச் சின்னத்துக்காக கீறினது. பூ ஒரு flash animation க்காக கீறினது. அந்த உருவங்கள வைச்சு சும்மா wallpaper மாதிரி மேல இருக்கிற படங்கள செய்தனான். அந்தப் பெண் மட்டும் போன கிழமை கீறினான். மூக்குத்தான் ஒழுங்கா வரேல எண்டு நினைக்கிறன். இப்ப இத எழுதேக்கதான் யோசிக்கிறன் – மூக்குத்தி குத்தியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.

தேசியம் விரிக்கும் சிறகுகள்
[படத்துக்கு மேல அமத்தினால் படம் பெருசா திறக்கும்]

எட்டு வயசில ஈழத்த விட்டு வெளிய வந்திட்டதால காந்தள் (கார்த்திகைப்பூ) பார்த்த ஞாபகம் இல்லை. ஆனா, செம்பகம் பார்த்த ஞாபகம் இருக்கு. மேல இருக்கிற செம்பகம் படமும் ஏற்கனவே கீறி பாவிக்காமல் வைச்சிருந்தது தான். இப்ப திரும்ப பழசுகளை எல்லாம் கிளறி படமாக்கினான்.