முதல் மூண்டும் வேற வேற சந்தர்ப்பங்களில வரைஞ்ச உருவங்கள். இலை ஒரு குறியீட்டுச் சின்னத்துக்காக (logo) வரைஞ்சது. வண்ணத்துப்பூச்சியும் ஒரு இணையப்பக்கத்தின்ர குறியீட்டுச் சின்னத்துக்காக கீறினது. பூ ஒரு flash animation க்காக கீறினது. அந்த உருவங்கள வைச்சு சும்மா wallpaper மாதிரி மேல இருக்கிற படங்கள செய்தனான். அந்தப் பெண் மட்டும் போன கிழமை கீறினான். மூக்குத்தான் ஒழுங்கா வரேல எண்டு நினைக்கிறன். இப்ப இத எழுதேக்கதான் யோசிக்கிறன் – மூக்குத்தி குத்தியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.




