இந்தப் படங்கள் இரண்டும் “பிரபாகரன் சிந்தனைகள்” எண்ட புத்தகத்தின்ர அட்டைப்படத்துக்காக செய்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முதல் யேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் எண்டு நாலு மொழியளில பிரபாகரன்ர கருத்துக்கள தொகுக்கிற முயற்சி ஒண்டு செய்தவை. யேர்மனியில படிக்கிற நாலு தமிழ் (பல்கலைக்கழக) மாணவியள் தான் இத மொழிபெயர்க்கிற வேலையள செய்தவை. அதில ஒருத்தி என்ர தோழி. அவள்தான் கேட்டாள் இப்பிடி ஒண்டு செய்யுறம், அட்டைப்படம் செய்து தாறியோ எண்டு. நானும் ஓமெண்டு செய்து குடுத்தன். 2 ஆண்டுகளுக்கு மேல ஆகுது – பிரபாகரனும் இருக்கிறாரா இல்லையா எண்டுற குழப்பத்தில சனமும் மூழ்கிட்டு – ஈழச்சூழலும் வேறவிதமா மாறிட்டுது – ஆனா, புத்தகம் இன்னும் வெளில வரேல. பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா எண்டுற குழப்பம்போல – புத்தகம் வருமா வராதா எண்ட குழப்பமும்.
இந்தப்படம் அப்ப பொருத்தமா இருக்குமெண்டு நினைச்சு செய்தனான். இப்ப பார்க்கேக்க அந்தப் புத்தகத்துக்கு இந்த அட்டைப்படம் எந்தளவுக்கு பொருத்தமா இருக்கும் எண்டு தெரியேல. தனிய பிரபாரன்ர படத்தை வைச்சு ஏதாவது செய்திருக்கலாமோ எண்டு படுது.
எது எப்படியா இருந்தாலும் – இந்தப் படம் digital imaging (கலவை) முறையில செய்தது. படத்தில தெரியிற ஒவ்வொரு உருவங்களும் தனித்தனிப் படங்கள். புற்தரை, மரம், பறவைகள், கயிறு எல்லாம் வேற வேற படங்களில இருந்து வெட்டி எடுத்து இந்தப்படத்துக்கு ஏற்றமாதிரி மாத்தினது. வானம், முகில் இரண்டும் adobe photoshop ல செய்தது. அதில தெரியிற மனித உருவம் poser எண்ட முப்பரிமாண உருவங்கள வடிவமைக்கிறதுக்கான ஒரு மென்பொருள பயன்படுத்தி செய்தது. பிறகு எல்லாப்படத்தையும் digital imaging மூலம் கலவை செய்து இந்த அட்டைப்படங்கள வடிவமைச்சனான்.



அட்டைப்படம் நல்லா இருக்கு. நல்ல கலை நேர்த்தியும், அர்த்தவாழமும்.
பிடிச்சிருக்கு. பாராட்டுக்கள்.
வைரமுத்து ட வரிகள் இருக்கு ” மேற்கே விதைத்த சூரியனை நாம் கிழக்கே முளைத்திட ஆணையிட்டோம். தோன்றிட ஏதும் தடையிருந்தால் அதைத் தோண்டி எடுக்கவும் துணிந்துவிட்டோம்”
எண்ணமும், வண்ணமும், அருமை. பாராட்டுக்கள்.
அட்டைப்படம் தை வைத்தே படைப்புலகில் ஆயிரம் கருக்களை உருவாக்கலாம். பேசாமல் பேசுகிறது. ஒளிவட்டம் ஒன்றைக் கட்டியிழுக்கும் மானிட முயற்சி தோல்வியில் துவளும் எவ்வுயிரையும் நம்பிக்கை கொண்டெழச் செய்யும் அற்புதப்படைப்பு. எவ்வளவு நேரத்திற்கும் அலுக்காமல் பார்க்க வைக்கிறது இந்தப்படம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
really nice!! keep it up!!
நன்றி
அழகான கற்பனை, இது எக்காலத்திலும் பொருந்தும் ஒரு காட்சி. மரத்தில் இருந்த்த குருவிகளின் அமைதி குலைந்ததிக்காக, அது எக்காலமாக இருந்தாலும் இருள் போகவேண்டும் என்ற தேவையில் மற்றம் இல்லைதானே