Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
நண்பர்களோடையும் தெரிஞ்சாக்களோடையும் தொலைபேசியிலயும் skype, gtalk, msn போன்றதுகளிலயும் கதைக்கிறனான். சும்மா சுகம் விசாரிப்புகளாக இல்லாமல், சுவாரசியமான விவாதங்களாகவோ, கருத்தாடல்களாகவோ இருக்கும். சில நேரங்களில அது நீண்ட உரையாடல்களாவும் இருக்கும். அதிலயும் போன தலைமுறை ஆக்களோட கதைக்கிறதெண்டது மகிழ்ச்சியான விசயம். அவேன்ர போராட்டம், அரசியல், சமூகம் தொடர்பான அனுபவங்கள அறிஞ்சு கொள்ளுறதில எனக்கு அதிக ஆர்வம். இருந்திட்டு யோசிக்கிறனான், இப்பிடி கதைக்கிற விசயங்கள ஒலிப்பதிவு செய்து இணைக்கவேணும் எண்டு.
அண்டைக்கு skype ல கி.பி.அரவிந்தன் அண்ணாவோட கதைக்கேக்க கேட்டனான் – இப்பிடி ஒலிப்பதிவு செய்யட்டோ எண்டு. அவரும் ஓம் எண்டார். உடன ஏற்கனவே இறக்கி வைச்சிருந்த skype call recorder ஐ அமத்தி ஒலிப்பதிவு செய்யத் தொடங்கிட்டன்.
ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தாப் பிறகு, இண்டைக்கு சனநாயக வழிப் போராட்டம் எண்டு கதைக்கப்படுற சூழலில – சனநாயகத்த பற்றி பொதுவாக எங்கட சமூகத்துக்குள்ள இருக்கிற கேள்வியளை மையப்படுத்தித்தான் எங்கட உரையாடல் அமைஞ்சிருந்தது.
அப்பிடி அண்டைக்கு நாங்கள் கதைச்சதுகள தொகுத்து இப்ப ஒரு குரல்பதிவா போடுறன். ஒலிப்பதிவை தொகுக்கிறதுக்கு audacity எண்ட ஒலித்தொகுப்பு மென்பொருள பாவிச்சனான். இலவசமான opensource மென்பொருள் தான்.
நான் கிட்டடில 16 mbit இணைய இணைப்புக்கு (vDSL) மாறினான். என்ர கணினிக்கு wireless usb stick பாவிக்கிறன். அது அந்த 16 mbit vDSL modemக்கு ஒத்துவரேல. அதால, ஒலிப்பதிவில கொஞ்சம் குழப்பங்கள் இருக்கும்.
