குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்
[2009 August 2 | 13:05]

குழந்தை பெறுதல் 01

இது ஒரு குழந்தை.
இது எப்படி வந்தது?

குழந்தை பெறுதல் 02

ஒரு அப்பா.
ஒரு அம்மா.
இவர்கள் சேர்ந்து,
பிறந்தது இந்தக் குழந்தை.

குழந்தை பெறுதல் 03

இங்கு -
அப்பாவிலும் ஆடை இல்லை.
அம்மாவிலும் ஆடை இல்லை.

அம்மாவில் –
மேலே தெரிவது மார்பு.
கீழே தெரிவது ஒரு வெடிப்பு.
அதை பெண்குறி என்போம்.

அப்பாவில் -
கீழே தெரிவது தண்டு.
அதை ஆண்குறி என்போம்.
அதனோடு சேர்ந்து -
கால்களுக்கு இடையே
தொங்குவது விதைகள்.

குழந்தை பெறுதல் 04

அப்பாவுக்கு அம்மா மீது நேசம்.
அம்மாவுக்கு அப்பா மீது நேசம்.
அணைக்கிறார்கள்.
முத்தமிடுகிறார்கள்.
அப்பாவின் தண்டு நீள்கிறது.
அதில் விறைப்பு ஏறுகிறது.

அம்மாவின் வெடிப்புக்குள்
அப்பாவின் தண்டு நுழைவதை
இருவரும் விரும்புகிறார்கள்.
அந்த நுழைவு இனிமை தரும்.

குழந்தை பெறுதல் 05

அம்மாவும் அப்பாவும்
படுக்கையில் கூடுகிறார்கள்.
வெடிப்புக்குள் தண்டு செலுத்தப்படுகிறது.
அந்த நிலையில் -
அவர்கள் மேலும் கீழுமாக ஆடுகிறார்கள்.

இதுவே கலவி எனப்படும்.
இது சுகமானதாக இருக்கும்.

இப்படியாக -
அம்மாவும் அப்பாவும் விரும்பும் போது,
அவர்கள் குழந்தையை உருவாக்கலாம்.

குழந்தை பெறுதல் 06

அம்மாவுக்கு அப்பாவில் விருப்பம்.
அப்பாவுக்கு அம்மாவில் விருப்பம்.
இருவரும் கூடி
குழந்தை பெற விரும்புகிறார்கள்.

அப்பாவின் விதையினுள்
விந்து அணுக்கள் உள்ளன.
கலவியின் போது
தண்டு வழியாக
விந்து அணுக்கள் வெளியேறும்.

விந்து அணுக்கள்
அம்மாவின் பெண் உறுப்பினுள்
நீந்திச் செல்கின்றன.
அவை வயிற்றினுள் இருக்கும்
ஒரு பையைச் சென்றடைகின்றன.
அதுவே கருப்பை ஆகும்.

இந்தப் பையில் காலத்துக்கு காலம்
ஒருவகை முட்டை உருவாகும்.
இந்த முட்டையுடன் விந்து இணைய
அவை குழந்தையாக உருவாகிறது.

குழந்தை பெறுதல் 07

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமும்
கருப்பையில் குழந்தை வளர்கிறது.
ஒன்பது மாத நிறைவில்
குழந்தை வெளியே வரத் தயாராகி விட்டது.

குழந்தை பெறுதல் 08

அம்மாவின் வயிறு
பெரிதாகி விட்டது.
ஆடைகள்
இறுக்கமாகி விட்டன.

குழந்தை நகர்வதை
அம்மா உணர்கிறாள்.
அப்பாவிடம் கூறுகிறாள்.

குழந்தை பிறக்கும் நாள்
நெருங்கி விட்டது.

குழந்தை பெறுதல் 09

அப்பா அம்மாவை
மகப்பேறு மனைக்கு
அழைத்துச் செல்கிறார்.

குழந்தை பெறுதல் 10

அங்கே அம்மாவை
படுக்கையில் கிடத்துகிறார்கள்.
மருத்துவர் வருகிறார்.
அம்மா அப்பாவுடன் பேசுகிறார்.
குழந்தை பிறக்கும் போது
மருத்துவர் உதவி புரிவார்.

குழந்தை பெறுதல் 11

பிரசவம் தொடங்குகிறது.
அம்மாவின் பெண் உறுப்பின் ஊடாக
முதலில் குழந்தையின் தலை
வெளியே வருகிறது.

குழந்தை பெறுதல் 12

அதன்பின் கைகள்.

குழந்தை பெறுதல் 13

குழந்தை முழுமையாக
வெளியே வந்துவிட்டது.
மருத்துவர் தொப்புள்கொடியை
வெட்டிவிட்டார்.
அதனோடு சேர்ந்து
நஞ்சுக்கொடியும் (கருக்குடை) வெளியேறிவிட்டது.

குழந்தை பெறுதல் 14

அம்மாவும் பிள்ளையும்
சில நாட்களுக்கு
ஓய்வெடுக்கிறார்கள்.
பின்னர் வீட்டுக்கு வருகிறார்கள்.
குழந்தைக்கு பசித்தால்
அம்மா பாலூட்டுவாள்.
பிள்ளை -
அம்மாவின் முலையிலிருந்து
பாலை உறிஞ்சிக் குடிக்கும்.

ஒரு கருத்து : “குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்”

  1. [...]  « முன்னையது பின்னையது »  [...]

உங்கள் கருத்தையும் பதிவு செய்க