சக இனங்களை அடக்கிக்கொண்டு – தனது சுதந்திரநாளைக் கொண்டாடுகிறது ஒரு நாடு. சக இனங்களின் உரிமைகளை மறுத்துக்கொண்டும், அவர்களை மிதித்துக்கொண்டும் – அவர்களின் பிணங்களின் மீது தனது தேசியக்கொடியைப் பறக்கவிடுகிறது ஒரு நாடு. வன்முறைகளைக் கட்டவிழ்த்துக்கொண்டும், ஆயுத உற்பத்தி செய்துகொண்டும், அயல் நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பிக்கொண்டும் – அகிம்சை பற்றிப் பேசுகிறது ஒரு நாடு. போராடும் இனங்களின் குரல்வளையை நசுக்கிக்கொண்டு – தனது தேசிய கீதத்தை இசைக்கிறது ஒரு நாடு. ஒழியட்டும் அதன் ஆதிக்கம் – உடையட்டும் அவ்விலங்கு. ஒடுக்கப்படும் இனங்களே விடுதலை பெறுக. போராடும் இனங்களே உரிமைகள் பெறுக.





